முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      தமிழகம்
Murugan 2023 04 02

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தி உள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது, கலாசாரத்தை பாதுகாப்பது குறித்து மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதல்வர்  மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும்.  அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போதுதான், அதன் பயன் நமக்கு தெரியும். 

ஏற்கனவே ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள். கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும். 

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது?  பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து