முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெபாசிட்தான் கேட்டார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 28-ந்தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதேபோல, அந்த சிறுவனின் சகோதரிக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு சிறுவனின் தந்தை அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிகிச்சை அளிக்க ரூ. 1,000 லஞ்சம் கொடுத்ததாகவும் சிறுவனின் தந்தை பரப்பரப்பு புகார் தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது.

இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறானது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ரூ.1,000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப்பட்டால் ஒவ்வொரு பரிசோதனைகளுக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது. இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் இருப்பதுதான்.இந்த உண்மையை உணராமல் திரித்து சொல்வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். அரசு ஆஸ்பத்திரிகள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து