முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் பள்ளி உரிமையாளர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
CBI 2023 04 19

Source: provided

காந்திநகர் : நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தொடங்குவதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. வினாத்தாள் கசிவு வழக்கை பிகார் காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய கல்வித் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவுசெய்து ஜூன் 23 விசாரணையைத் தொடங்கியது. விசாரணைக்காக சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணைக் குழுக்கள் பிகாரின் பாட்னா, கோத்ரா பகுதிகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜெய் ஜலராம் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்த் படேலை கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசாமும் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து