முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் போர்: நேட்டோ நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      உலகம்
Putin 2023 07-14

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன்போர் விரைவில் அணு ஆயுத போராக மாறி விடும் என நேட்டோ  நாடுகளுக்கு அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த 2022-ல் அந்த நாடு மீது போர் தொடுத்தது. உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்து போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் அளிப்பதால் ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. 

இதனிடையே, இந்த போரின் போக்கு தற்போது ரஷ்யாவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

அதே சமயம், ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் எண்ணுவது தவறு என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் என்று தெரிவித்துள்ள புடின், ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறி விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து