எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, காப்பி அடித்து உள்ளார்கள்.
இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம். 513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள்.
பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதைபோல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள்.
உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும்.
நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும்.
ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே.
தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.
அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும். ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது.
மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 days ago |
-
தமிழகத்தில் விஷக்காய்ச்சல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலும் வேடிக்கை பார்ப்பதாக, தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்
-
நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
04 Oct 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரம
-
வீடு திரும்பினார் ரஜினி
04 Oct 2024சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்கள்
04 Oct 2024ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபரின் வருமானம் இரு மடங்காக உயரும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
04 Oct 2024புதுடெல்லி : வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும
-
தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை : அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
04 Oct 2024கோவை : தமிழகத்தில் எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
லெபனானுக்கு முழு ஆதரவு: கத்தார் அறிவிப்பால் பதற்றம்
04 Oct 2024தோகா : லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கத்தார் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
04 Oct 2024மும்பை : இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
-
சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
04 Oct 2024மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
-
காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
04 Oct 2024ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
கூகுளின் ஏ.ஐ. செயலி விரைவில் 8 இந்திய மொழிகளில் அறிமுகம் : கூகுள் நிறுவன இந்திய சி.இ.ஓ. தகவல்
04 Oct 2024புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
04 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
04 Oct 2024சென்னை : கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Oct 2024சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி
-
4 முனை போட்டியில் வெல்லப்போவது யார்? - அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : 90 தொகுதிகளில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
04 Oct 2024சென்னை : சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
-
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்
04 Oct 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்ச
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
04 Oct 2024மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு பங்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
04 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது க
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து
04 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
-
ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல: த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
04 Oct 2024சென்னை : ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்பதை புரியவைப்போம் என்று த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
-
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மாநில அரசுகள் வழங்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி
04 Oct 2024புதுடெல்லி : எஸ்.சி., எஸ்.டி.
-
தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 2 - ம் இடத்திற்கு முன்னேறினார் மெட்டாவின் மார்க் ஸூகர்பெர்க்
04 Oct 2024நியூயார்க் : சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க்.