முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

314-வது பிறந்தநாள்: அழகு முத்துக்கோனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      தமிழகம்
CM-1-2024-07-11

சென்னை, சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 314-வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,  அன்னாரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

அதன்படி இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த  அழகு முத்துக்கோனின் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன் மற்றும் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின்  பிறந்தநாள் விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

 பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் அழகுமுத்துக்கோனின்  பிறந்தநாள். அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து