Idhayam Matrimony

சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அமைச்சர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
Samsung-2024-10-05

Source: provided

சென்னை : சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்து பேசினார். அப்போது நிர்வாகத்தினர் என்னென்ன கோரிக்கையை ஏற்பார்கள்? என்பதை கேட்டறிந்தார்.

இதன் அடுத்த கட்டமாக நேற்று காலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தினரும் இருங்காட்டு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து