முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கெஜ்ரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே, அவர் மீது சிபிஐ தொடந்த ஊழல் வழக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலையும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னதாக, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. என்றாலும், அந்த வழக்கில் அவர் ஜாமீன் பத்திரம் வழங்காததால் திஹார் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து