முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். 

இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. 

இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தில் தேசத்தை காத்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

25-வது கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து