முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது. 

வருகிற சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்ற உள்ளார். அதன்பின்னர், ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் அமெரிக்காக செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் அவர் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

இதைத் தொடர்ந்து முதல்வரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்துக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து