முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பம்பை - சன்னிதானம் கேபிள் கார் அமைக்க நடவடிக்கை தீவிரம் : தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Roop-Car 2023-10-08

Source: provided

 திருவனந்தபுரம் : பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15-ல் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு சீசன் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு பின், அமைச்சர் வாசவன் கூறியதாவது:

கடந்த சீசனில், 52 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு அதை விட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று  கருதுகிறோம். ஆடி மாதத்தில் எதிர்பார்த்ததை விட, அதிக பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இந்த சீசனில், ஆன்லைன் வாயிலாக தினமும் 80,000 பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.

தற்போது நிலக்கல்லில் 8,000 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 10,000 ஆக உயர்த்தப்படும். எரிமேலியில், 1,100 வாகனங்கள் நிறுத்தும் வசதியை 2,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 

விபத்தில் காயமடையும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் செய்யப்படும்.சன்னிதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். வனவிலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.

பம்பையிலும், சன்னிதானத்திலும் மழை, வெயிலால் பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க கூரைகள் அமைக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து