முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இதை தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார். தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்கலாமா? என்று அரசிடம் கேள்வியெழுப்பினார்.

கல்வராயன் மலைப் பகதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரசுக் குழுவுடன் மூத்த வழக்குரைஞர் தமிழ் மணியும் கல்வராயன் மலைக்கு உடன் செல்ல வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து