முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களை தாமதப்படுத்துவதாக வழக்கு: கேரளம், மேற்குவங்க மாநில கவர்னர்களுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்குவங்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மற்றும் மேற்கு வங்க கவர்னர்கள் மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வதாகக் கூறி தாக்கல் செய்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அந்தந்த கவர்னர் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.மாநிலங்களில் இருந்து கூட்டறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி மேற்கு வங்க அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது. முன்னதாக, கவர்னர் போஸுக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகளுடன் சயான் முகர்ஜி என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனிடையே, கேரள கவர்னர் ஆர்ஃப் முகமது கானுக்கு எதிராக கேரள அரசு இதேபோன்ற மனுவை தாக்கல் செய்தது. கேரள அரசின் சார்பாக நேற்று ஆஜரான மூத்த வழக்குரைஞர் கேகே வேணுகோபால், கேரள கவர்னர் அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதாக வலிவுறுத்தினார். இந்த விவாகாரத்தில் கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின்போது மேற்கு வங்கத்திலும் கவர்னர் போஸுக்கு எதிராக இதேபோன்ற பிரச்னை இருப்பதாக மூத்த வழக்குரைஞர் ஏஎம் சிங்வி சுட்டிக் காட்டினார். ”ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் விசாரிக்கும்போது மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகத்தின் வழக்கிலும் இதேதான் நடந்தது” என்று அவர் தெரிவித்தார். ”மேற்கு வங்கத்தின் வழக்கிலும் நோட்டீஸ் வழங்க வேண்டும். கேரள கவர்னர் அலுவலகத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்புவோம்” என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து