முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பம்...

இந்தியா - இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன. 24 வயதாகும் ஷுப்மன் கில் 19 டி20 போட்டிகளில் 505 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 29.7 ஆக இருக்கிறது. 44 ஒருநாள் போட்டிகளில் 2271 ரன்களும் அதில் சராசரி 61.37ஆக இருக்கிறது. இந்நிலையில் நேர்காணலில் ஷுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விளையாடவில்லை...

2024 உலகக்கோப்பை வரை டி20 செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தியில்லை. நான் நினைத்தது மாதிரி விளையாடவில்லை. அடுத்து 30-40 டி20 போட்டிகள் வருகின்றன. இதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். பேட்டராக எனது பங்கில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. நான் பேட்டராக விளையாடும்போது எனது நாடு வெற்றி பெறவே விரும்புகிறேன். ஆனால், நீங்கள் களத்தில் இருக்கும்போது, ​​ஒரு வீரராக விளையாடுவதைவிட அதிகமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நானும் சூர்யகுமாரும் ஒரேமாதிரி சிந்திக்கக் கூடியவர்கள். தென்னாப்பிரிக்க தொடரில் அவரது தலைமையில் விளையாடியிருக்கிறேன். எங்களது புரிதலும் உரையாடல்களும் ஒரேமாதிரி இருக்கும். வரும்போட்டிகளில் அதைப் பார்க்கலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து