முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி முன்னாள் பா.ஜ.க எம்.பி. மாஸ்டர் மதன் காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
Nilgiris 2024 07 27

Source: provided

ஊட்டி : நீலகிரி முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மாஸ்டர் மதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன்(93). இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.

அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மதன் காலமானார். இது பற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் நேற்று அவரது வீட்டிற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மதன் உடலுக்கு  அஞ்சலி செலுத்தினர்.  

இந்த நிலையில், மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். 

தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும்,  ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து