முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: சென்னையில் பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. 

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக  நேற்று முதல் இன்று   ஞாயிற்றுக்கிழமை வரை 2 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. 

அதாவது, 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும், ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து இருந்தன.  இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் காவலர்கள் தீவிரம் காட்டி ஒழுங்குபடுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து