முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கட்டிடத்திற்குள் மழைநீர்: மக்களவை செயலகம் விளக்கம்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Parliament-1

புதுடெல்லி, பாராளுமன்றத்திற்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக மக்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 27-ந்தேதி பெய்த கனமழையின்போது அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இந்த சம்பவத்தில் அங்கு படித்து வந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் சற்று மழை தணிந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதனிடையே பெய்த கனமழையால், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகியது. மழைநீர் ஒழுகிய இடத்தில் பக்கெட் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பாராளுமன்றத்திற்குள் மழைநீர் ஒழுகியது தொடர்பாக மக்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது. அதில், "புதிய பாராளுமன்றத்தில் இயற்கை ஒளியை பயன்படுத்த லாபி உள்ளிட்ட பல பகுதிகளில் கண்ணாடி குவிமாடங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது பெய்த கனமழையில் கண்ணாடி குவிமாடங்களை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பிசின் பொருள் விலகியதால் நீர்க்கசிவு ஏற்பட்டது. உடனடியாக இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், மழைநீர் கசிவு நின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து