முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிபவ் குமார் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, ஆம்ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

டில்லி ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது, வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம், அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 01) நீதிபதிகள் சூர்ய காந்த், தீபன்கர் தட்டா மற்றும் உஜால் புயான் ஆகியார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

முதல்வரின் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? முதல்வர் அலுவலகத்திற்கு குண்டர்கள் தேவைப்படுகிறார்களா? தாக்குவதை நிறுத்தச் சொல்லி மாலிவால் கூறியும், நீங்கள் தொடர்ந்து அடித்துள்ளீர்கள். என்ன நினைத்து இப்படி செய்தீர்கள்? அதிகாரம் உங்களிடம் இருப்பதாக தலைக்கனமா? நீங்கள் முன்னாள் செயலாளர்தான். பாதிக்கப்பட்ட பெண் அங்கு இருப்பதற்கு உரிமை இல்லை எனில், உங்களுக்கும் அங்கு இருப்பதற்கான உரிமை இல்லை, என்று கோபமாகக் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து