முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாழ்த்தப்பட்டவர்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு: சமஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Akhilesh yadav

லக்னோ, அயோத்தியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடனும், பாதுகாப்புடனும் தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து வருவதாக சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

மேலும், நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக விவசாயிகளுடன் வணிக நிறுவனத்தினர் சண்டை போடுவதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் கேட்டால், எவ்வித புகாரும் வரவில்லை என்று பொய் கூறுவதாகவும் சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.சமாஜ்வாதி கட்சியின் ஊடகப் பிரிவின் எக்ஸ் கணக்கில், இரண்டு விடியோக்கள் பகிரப்பட்டு, அயோத்தில் உள்ள வணிக நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதல் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், அறிவுறுத்தல் பேரில் அவரின் கூட்டாளிகள் பாதுகாப்புடன் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ராமர் கோவில் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தி சொத்துக் குவிப்புக்கான பகுதியாக மாறிவிட்டது, பாஜக, முதல்வர் யோகி, தொழிலதிபர்கள் அனைவரும் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமாஜ்வாதி வெளியிட்ட அறிக்கையில், தனியார் குழுமம் ஒன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாஞ்சி சமூக மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் குண்டர்கள் விவசாயிகளை அடித்து துன்புறுத்தியதுடன் முதல்வரின் உத்தரவின் பேரின் விவசாயிகள் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “அயோத்தியில் விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, கோடீஸ்வரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உபி அரசு இன்னும் ஆட்சியில் இருக்கிறதா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து