முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவரை உடைத்த கோலி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வங்காளதேசத்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள். அதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக கடினமான பயிற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த பயிற்சியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இணைந்து பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

அதில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற 2வது நாள் பயிற்சியில் விராட் கோலி ஒரு அதிரடியான சிக்சரை அடித்துள்ளார். பறந்து சென்ற அந்த பந்து சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு அருகில் உள்ள சுவரை உடைத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

______________________________________________________________

இலங்கை அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி இலங்கை அணியில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையில் இந்த அணி களமிறங்குகிறது. ஓஷதா பெர்னாண்டோ மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். நிஷான் மதுஷ்காவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை.

இலங்கை அணி விவரம்: தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜயசூரியா, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

______________________________________________________________

இதுதான் இலக்கு: நஜ்முல்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது.  இந்த தொடர் குறித்து நஜ்முல் ஷாண்டோ கூறுகையில், "நிச்சயம் இந்த தொடர் எங்களுக்கு மிக சவாலான ஒரு தொடராக இருக்கப்போகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் நிச்சயம் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எங்களை விட தரவரிசையில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ஆனாலும் நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த தொடரில் வெற்றி தோல்வி என்பதைவிட ஐந்து நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்த தொடரில் எங்களது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்திய அணிக்கு கடும் சவாலை அளிப்போம். எங்களது அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து