முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னுடைய நினைவுப் பரிசுகளை ஏலம் எடுக்க பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Modi-1-2024-09-19

புது டெல்லி, பல்வேறு நிகழ்வுகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பொதுநிகழ்வுகளில் எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை நான் ஏலத்தில் விடுவது வழக்கம். ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நமாமி கங்கே முயற்சிக்குச் செல்கிறது.

இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கி விட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். உங்களுக்கு சுவாரஸ்யம் தரும் நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலம் விலை ரூ. 600-ல் தொடங்கி ரூ. 8.26 லட்சம் வரை இருக்கிறது. கடந்த ஓராண்டாக, பிரதமர் மோடி பெற்ற நினைவு பரிசுகளின் ஏலம் அவரது பிறந்தநாளில் தொடங்கியது. வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை இந்த ஏலம் நடைபெறுகிறது. சுமார் 600 பொருட்கள் ஏலத்தில் விடப்படப்படுவதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து