முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிஷி அமைச்சரவையில் புதுமுகத்துக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-09-19

புது டெல்லி, டெல்லியில், நாளை 21-ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி அமைச்சரவையில் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.,வான, முகேஷ் அலாவத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவாலின் ராஜினாமாவை அடுத்து, அதிஷி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, நாளை 21-ம் தேதி அன்று டெல்லியின் முதல்வராக அதிஷி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.

அவரது அமைச்சரவையில், சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.வான, முகேஷ் அலாவத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. முகேஷ் அலாவத் தலித் சமூகத்தை சேர்ந்தவர். 

இவருடன் மற்ற 4 அமைச்சர்களான கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹூசைன் ஆகியோர் அமைச்சர்களாக மீண்டும் பொறுப்பேற்பர் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலாவத், முதல்முதலில் 2020-ல் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் போட்டியிட ஆம்ஆத்மி மேலிடம் வாய்ப்பு அளித்தது. அவர் அந்த தொகுதியில் 48,042 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை தோற்கடித்தார். சந்தீப் குமார் முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அலாவத், டெல்லி வட மேற்கு மண்டலத்தில் தலித் சமூகத்தின் பலம் வாய்ந்தவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், வடமேற்கு டெல்லியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரசுக்கு  அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து