முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை அமைக்ககோரி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பூபேஸ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் மாவட்ட நகர் பகுதியில் உள்ள வல்லல் பாரி என்னும் நடுநிலைபள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த முன்மொழுவு செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பின்னரே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். நேரடியாக நடுநிலைபள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நடுநிலை பள்ளியை உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்தும் நடவடிக்கையே 3 வருடங்களாக நிலுவையில் உள்ளது. 

உயர்நிலைபள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த சுமார் 15 ஆண்டுகளாவது ஆகும். தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறது.  இந்தசூழலில் அனைத்து தாலுக்காக்களிலும், குறைந்த பட்சம் மாவட்ட தலைநகரங்களிலாவது அரசு மேல்நிலை பள்ளிகளை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலவில்லை எனில் மருத்துவ உள்ஒதுக்கீடை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என ஐகோரட் மதுரை கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறபித்து வழக்கு விசாரணையை அக். 14-ம் தேதிக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து