முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பது எப்போது ? அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      தமிழகம்
Anbarasan 1

சென்னை, உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களே, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வந்தன.மேலும் நேற்று முன்தினம் மாலை இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தான் துணை முதல்வர் ஆவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலினும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, 'இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி பதவியேற்பார். அவர் துணை முதல்வராவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில், ஏன் நாளையே அறிவிப்பு வெளியாகலாம்' என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து