முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா குறித்து சர்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தார். இதனை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் சார்பில் 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பி. எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூர் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே வெவ்வேறு வழக்கில் உள்ளதால், விசாரணையை வேறு தேதியில் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதைச் சிறப்பு நீதிபதி ஷூபம் வர்மா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து அடுத்த விசாரணை செப்டம்பர் 21-ம் (நாளை) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து