முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் வரவேற்போம்: அமைச்சர் எ.வ.வேலு பதில்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
EVa-Velu 2023 04 01

வேலூர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வரவேற்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வேலூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவர் முடிவு செய்து அறிவித்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம். கீழ்மட்ட தொண்டர்கள் முதல் கேபினட்டில் உள்ள அவைமுன்னவர் துரைமுருகன் உள்பட அனைவரும் அதனை உளமாற வரவேற்போம்.

திமுக தலைவர் என்ன சொல்கிறாரோ அதை 100 சதவீதம் ஏற்று கொள்கிற ஒரு இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அதனால்தான் 75 ஆண்டுகள் கடந்து பவள விழா கொண்டாடுகிற இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்தை பொறுத்தவரைக்கும் தலைமை என்ன சொல்கிறதோ அதை அனைத்து தொண்டர்களும் ஏற்று கொள்வார்கள்.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் தரமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார். தமிழகத்தில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 30-ந் தேதி மத்திய அரசின் சார்பில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நான் கலந்து கொள்ள உள்ளேன். அப்போது தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை கடிதம் மூலம் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து