முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
Kutralam--2023-07-06

தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் முடிந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த திடீர் மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து