முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

500 அர்ச்சகர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவி தொகை ரூ.50 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : அர்ச்சகர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவி தொகையாக 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில், இந்து சமய அற நிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணி புரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.

இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2024-ம் ஆண்டுக்கான 'தேசிய நல்லாசிரியர் விருது 'பெற்ற ஆசிரியர்கள் இரா. கோபிநாத் மற்றும் இரா. சே. முரளிதரன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உடன, இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து