முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று (அக். 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த நிலையில், கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணியின்போது தங்கக்கொடி மரத்தின் வளையம் உடைந்ததாக தகவல் வெளியாகின. பின்னர் அதனை சரிசெய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கிய நிலையில் தங்கக்கொடி மரம் சேதமடைந்தது குறித்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து