முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Haryana-Assembly-Election-2

சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஒரே கட்டமாக... 

அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

4 முனை போட்டி... 

மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இங்கு 4 முனை போட்டி நிலவுகிறது.

காங்., நம்பிக்கை...

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. இருப்பினும், பாஜக, காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் தெரிவிக்கின்றனர்.  மாநிலத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால், இம்முறை மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா்கள் என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது. 

வரும் 8-ம் தேதி...

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்நிலையில், வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றன. தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து