முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
TK-Sivakumar 2024-10-07

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு வழியில் சென்று மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை இருகரம் கூப்பி வணங்கினார். அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு முன்பு, அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன். அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் சிறந்த ஆட்சி அமைந்தது. நல்ல மழை பொழிவும் இருக்கிறது. அதன்பிறகு, அண்ணாமலையாரை மீண்டும் இன்று வந்து தரிசனம் செய்துள்ளேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் சுற்று பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாமலையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கலைநுட்ப சிற்பங்களை பார்க்குபோது அற்புதமாக உள்ளன'' என்றார். 

பின்னர் அவர், செய்தியாளர்கள் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் வருமாறு: இந்தியாவில் நதிகள் தேசியமாக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கு பலன் தருமா? - “நிச்சயமாக. நதிகளில் செல்லும் தண்ணீர், கடலில் கலந்து வீணாகிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து