முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிச்சா கோஷுக்கு விருது

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      விளையாட்டு
Richa-Ghosh 2024-10-07

Source: provided

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 105 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 108 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ரிச்சா கோஷ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

______________________________________________________________________________

லூசியா கிங்ஸ் சாம்பியன் 

6 அணிகள் கலந்து கொண்டுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கயானா தரப்பில் அதிகபட்சமாக பிரிட்டோரியஸ் 25 ரன்கள் எடுத்தார். லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 139 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. செயிண்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் ஆரோன் ஜான்ஸ் 48 ரன்கள் எடுத்தார்.

______________________________________________________________________________

இந்தியா அபார வெற்றி

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன்படி குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் வங்காளதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இறுதியில் 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்த இந்திய அணி, வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

______________________________________________________________________________

தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் நேற்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட யோசனைக்குப் பிறகு, ஜிம்னாஸ்டிக்சில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் இது சரியான நேரம். ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும், மேலும் ஒவ்வொரு கணத்திற்கும் – உயர்வு, தாழ்வு மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நான் ஓய்வு பெறுகிறேன் என்று எழுதுகிறேன். ஆனால் ஜிம்னாஸ்டிக்சுடனான எனது தொடர்பு ஒருபோதும் இழக்காது. என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு பாதுகாப்பான வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் இந்த விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

______________________________________________________________________________

எனக்கு மறுபிறப்பு: சக்கரவர்த்தி 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்குள் திரும்புவது உணர்வுபூர்வமானது. மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவதில் மகிழ்ச்சி. இதை மறுபிறப்பு போல உணர்கிறேன். வழக்கமாக நான் கடைபிடிக்கும் அதே செயல்முறையை பின்பற்றுகிறேன்.  அடுத்து என்ன என்பது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை.  இந்திய அணியில் வாய்ப்பு பெற உயர்ந்த செயல்திறன் அவசியம். அதுதான் வாய்ப்புக்கான கதவை தட்டும் வழியும் கூட. தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து