முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1 2024-10-07

Source: provided

சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுரஅடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மரவீடு, அருவி, இசை நீருற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், கே. என். நேரு உள்பட திமுக அமைச்சர்களும், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பூங்காவைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிப் லைனில் ஏறி சாகசம் செய்ய பெரியவர்களுக்கு ரூ. 250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ. 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பறைவகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75, மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண அனைத்து வயதினருக்கு ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைக் காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, விடியோ கேமராவுக்கு ரூ. 5,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுக் கட்டணங்கள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து