முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் சாலை விபத்தில் நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர்கள் 2 பேர் பலி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

ஈரோடு : ஈரோட்டில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு நிகழ்ச்சி பெண்தொகுப்பாளர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கம்பத்தில் மோதியதில் இரு இளம்பெண்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்,நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் அதிகாலை தனது காரில் இரு பெண்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி நசியனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது விவ்லரசம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடிரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கம்பத்தில் மோதி புதர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இரு பெண்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீஸார் தீயணைப்பு வீரர்கள்  உதவியுடன் 45நிமிட போராட்டத்திற்கு சாலையோர புதரில் தலை குப்புற கவிழ்ந்து இருந்த காரை கிரேன் மூலம் மீட்டு காரில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காயமடைந்த ஓட்டுநர் கலைச்செல்வனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதர குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக உயிரிழந்த பெண்களின் ஒருவர் அந்தியூரை  சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் செளந்திரியா என்பதும் கோவை சேர்ந்த ரிஸ்வானாவும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.கோவை நோக்கி சென்றது தெரியவந்தது.மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து