முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது: டிரம்ப்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      உலகம்
Trump-Modi-2024-10-10

வாஷிங்டன், மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். 

இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:- 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறி விட்டது. 

அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களது தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர். ஆனால் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறி விடுவார். 

இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்த போது, நான் உதவி செய்கிறேன் என நான் மோடியிடம் கூறினேன். அதற்கு மோடி, நான் பார்த்து கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார். 

பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர். தேவைப்படும் போது, எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என்றார். 

மேலும் 2019-ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின் போது பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்த டிரம்ப், அந்த அரங்கம் நிரம்பிருந்தது. அங்கிருந்தவர்கள் மோடிக்காக ஆரவாரம் செய்வதைப் பார்ப்பது அழகாக இருந்தது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து