முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      உலகம்
Sundar-Pichai 2024-05-02

புது டெல்லி, சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புகழாரம் சூட்டியுள்ளார். 

பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு  உயிரிழந்தார்.  அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

அவருடைய மறைவு பற்றி கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், 

இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர்.    கூகுள் நிறுவனத்தில் வைத்து கடைசியாக அவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்தது.  வெய்மோவின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம்.  

அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவர், ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருக்கிறார்.  இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர்.

 அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து