முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சேலம்,  நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் தி.மு.க. பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது என்று  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 

தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது. இந்த தேர்வைக் கொண்டு வந்ததும் தி.மு.க.தான், இன்றைக்கு அந்த தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகத்தை அரங்கேற்றுவதும் தி.மு.க.தான். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். இப்படியாக, நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறது தி.மு.க. அரசு.

 மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்த போதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது. பல ஆண்டு காலமாகியும், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடையாது, பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஒரு நாடகத்தைத்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். 

 நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையைக் கொண்டு வந்துதான், நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அதற்காக தி.மு.க. என்ன முயற்சி எடுத்தது?  

 2019 மற்றும் 2024-ல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் எதையுமே செய்யவில்லை. இவ்வாறு  அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து