முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு ரூ.1.78 லட்சம் கோடி: தமிழகத்திற்கு ரூ. 7,268 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

புது டெல்லி, வரி வருவாயில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ. 1.78 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ. 7,268 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ. 1.78 லட்சம் கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. 

அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி மாநில வாரியாக நிதி விடுவிக்கப்பட்ட விபரம் பின்வருமாறு:

 ஆந்திராவுக்கு ரூ.7,211 கோடியும், அருணாச்சல பிரதேசத்திற்கு ரூ.3,131 கோடியும், அசாமிற்கு ரூ.5,573 கோடியும், பீகாருக்கு ரூ.17,921 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.6,070 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

 கோவாவிற்கு ரூ. 688 கோடியும், குஜராத்திற்கு ரூ. 6,197 கோடியும், அரியானாவிற்கு ரூ.1,947 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ. 1,479 கோடியும், ஜார்க்கண்ட்டிற்கு ரூ. 5,892 கோடியும், விடுவிக்கப்பட்டுள்ளன.

 கேரளாவிற்கு ரூ. 3,430 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ. 6,498 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ. 13,987 கோடியும், மகராஷ்டிராவிற்கு ரூ. 11,255 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1,276 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

 மேகாலயாவிற்கு ரூ. 1,367 கோடியும், மிசோரத்திற்கு ரூ. 891 கோடியும், நாகலாந்திற்கு ரூ. 1,014 கோடியும், ஒடிசாவிற்கு ரூ. 8,068 கோடியும், பஞ்சாபிற்கு ரூ. 3,220 கோடியும், ராஜஸ்தானிற்கு ரூ. 10,737 கோடியும், சிக்கிமிற்கு ரூ. 691 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்திற்கு ரூ. 7,268 கோடியும், தெலுங்கானாவிற்கு ரூ. 3,745 கோடியும், திரிபுராவிற்கு ரூ. 1,261 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ. 31,962 கோடியும், உத்தரகாண்டிற்கு ரூ. 1,992 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ. 13,404 கோடியும் விடுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து