எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும். மறைந்த திரு ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
ரத்தன் டாவின் பங்களிப்புகள் நமது தேசத்திற்கும் மக்களுக்கும் அளவிட முடியாதது. வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும். அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டாவை விலக்கி விட்டு எழுத முடியாது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா தமது குழுமத்தை உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும்.
பாமக தலைவர் அன்புமணி:
இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழ்ந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2025.
02 Jan 2025 -
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு: ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்குகின்றனர்
02 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை இன்று முதல் வீடுவீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் வழங்குகின்றனர்.
-
இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து: திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்
02 Jan 2025சென்னை, இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடர்ந்த வழக்கில் திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தவறான தகவலை பரப்புகிறார்கள்: சர்ச்சையான பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்
02 Jan 2025மதுரை, சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று ஆண்ட பரம்பரை பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
பல்கலை., மாணவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
02 Jan 2025சென்னை, அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என தமிழக அரசை வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 1,365 கோடி ரூபாய் காணிக்கை மூலம் வருவாய்
02 Jan 2025திருமலை, உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலு
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ். பதில்
02 Jan 2025சென்னை, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
மாலத்தீவில் அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதி? அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு
02 Jan 2025மாலி, மாலத்தீவில் அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதி செய்ததாக அமெரிக்க பத்திரிகையில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் மக்கள் கூட்டத்துக்குள் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு
02 Jan 2025நியூ ஆர்லியன்ஸ், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில், டிரக் ஓட
-
தடையை மீறி போராட முயற்சி: சவுமியா அன்புமணி கைது
02 Jan 2025சென்னை, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் போலீசாரால் கைது செய்யதனர்.
-
பல்கலை. மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. மகளிர் அணி பேரணி: காவல்துறை அனுமதி மறுப்பு
02 Jan 2025மதுரை, பல்கலை. மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. மகளிர் அணி இன்று நடத்தவிருந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
-
அதிகரிக்கும் 'ஸ்க்ரப் டைபஸ்' தொற்று: மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
02 Jan 2025சென்னை, தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்று அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த தொற்றுக்குறித்து மக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அ
-
1901-க்குப் பிறகு இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
02 Jan 2025புதுடெல்லி, 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான்.
-
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வெளியேற்றம்
02 Jan 2025ராமநாதபுரம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் மாற்றமா? ராமதாஸ் பதில்
02 Jan 2025சென்னை, பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் தான் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
02 Jan 2025சென்னை, சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்று முதல் ஜனவரி 26 வரை ஜெய் பாபு, ஜெய் பீம் பேரணி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
02 Jan 2025புதுடெல்லி, இன்று முதல் ஜனவரி 26 வரை ஜெய் பாபு, ஜெய் பீம் பேரணி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய விவகாரம்: மருத்துவமனை மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
02 Jan 2025சென்னை, தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது 7 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நடந்த சைபர் மோசடி: மேற்குவங்கத்தில் இ.டி. சோதனை
02 Jan 2025கொல்கத்தா, தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு அதிகமான சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
-
2024-ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தோர் 10.52 கோடி பேர்
02 Jan 2025சென்னை, கடந்த ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Jan 2025சென்னை, பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும் என்றும் பெண் அதிகாரத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் சென்னையில் மகளிர் திறன் மேம்பாடு மை
-
4.3 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
02 Jan 2025காபுல், 4.3 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
செம்மொழி பூங்காவில் 4-வது சென்னை மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2025சென்னை, சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-
-
அ.தி.மு.க. சார்பில் 8-ம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Jan 2025சென்னை, தி.மு.க. அரசு மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க.
-
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு நாங்கள் தாரை வார்க்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
02 Jan 2025சென்னை, 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.