முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      விளையாட்டு
10-Ram-58

Source: provided

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் , ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். 

நாடு திரும்புகிறார் பாக். கேப்டன் 

தந்தை மறைவால் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து கராச்சிக்கு திரும்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான மகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வியாழன் காலை பாத்திமாவின் தந்தை இறந்ததை அடுத்து, முதல் விமானத்தில் பாத்திமா சனா நாடு திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் துணை கேப்டன் முனீபா அலி தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. 22 வயதான பாத்திமா சனா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். மேலும் அவர் இல்லாதது அணிக்கு பேரிழப்பாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒன்றில் வெற்றிபெற வேண்டும். இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தற்போது குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி வருகிற திங்கட்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

வங்காளதேச கேப்டன் விளக்கம்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி தோல்வி குறித்து வங்காளதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்ததாவது., இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விஷயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நான் நினைக்கிறேன். 

அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.ஆனால் 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதேசமயம் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களும் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.இவ்வாறு நஜ்முல் கூறினார்.

இந்திய மகளிர் அணி வெற்றி

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா களம் இறங்கினர்.இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிருதி மந்தனா 50 ரன்னிலும், ஷபாலி வர்மா 43 ரன்னிலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்னே மற்றும் சமாரி அத்தப்பத்து களமிறங்கினர். இதில் விஷ்மி குணரத்னே முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் சமாரி அத்தப்பத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்ஷிதா 3 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 19.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து