முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்புக்கு தடை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
21

Source: provided

புதுடெல்லி: ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி இதனை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியதும் தெரியவந்ததால் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு  மத்திய உள்துறை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளத்தில் , "ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பல உலக நாடுகள் தடை செய்திருந்த நிலையில் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தநிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து