முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு பலத்துடன் லெபனானை ஆதரிப்போம்: ஈரான் அரசு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      உலகம்
Iran 2024-10-13

Source: provided

பெய்ரூட் : லெபனான் அரசின் மக்கள், இஸ்லாமிய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு ஈரான் அரசு எப்போதும் முழு பலத்துடன் ஆதரிப்போம் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப் தெரிவித்துள்ளார். 

காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் உயிரிழந்து உள்ளனர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், பெய்ரூட்டில் லெபனான் சபாநாயகர் நபி பெர்ரி உடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப் கூறியதாவது, 

லெபனான் அரசின் மக்கள், இஸ்லாமிய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு ஈரான் அரசு எப்போதும் முழு பலத்துடன் ஆதரிப்போம் என அவர் கூறினார். 

மேலும், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு அரசாங்கத்தின் மேற்பார்வையில் உதவிகளை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மேலும்  இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசருல்லாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து