முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறமை வாய்ந்தவர்: ஜெய்ஸ்வாலுக்கு ரோகித் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

பெங்களூரு : இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என ரோகித் சர்மா பாராட்டி உள்ளார்.

டெஸ்ட் தொடர்... 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே...

இந்நிலையில், இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா கூறியதாவது, இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. தற்போதுதான் அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி விளையாடி வந்தாலும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான எல்லா தகுதியும் அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதன் காரணமாகவே அவர் என்னுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

வெற்றிகரமாக.... 

டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியின் சூழல் எவ்வாறு செல்கிறதோ? அதை பார்த்தே எங்களது அணுகுமுறையை நாங்கள் கடந்த சில தொடர்களாக செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் கான்பூர் டெஸ்டின் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் அதிரடியாக விளையாடிய அந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தோம். இந்நிலையில் தற்போது பெங்களூர் நகரில் மழை பெய்து வருவதால் முதல் டெஸ்ட் போட்டி எவ்வாறு செல்லும் என்று தெரியவில்லை. எனவே போட்டியின் நாட்கள் எவ்வாறு செல்கிறது என்பதை பொறுத்து எங்களது அணுகுமுறை மாறும்.இருப்பினும் இந்த போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறவே முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து