முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5.9 ரிக்டர் அளவில் கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      உலகம்
Earthquake 2024-01-02

Source: provided

அங்காரா : கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.46 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள நகரங்களான தியர்பாகிர், எலாசிக், எர்சின்கான் மற்றும் துன்செலி ஆகிய இடங்களில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து