முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணியில் பராஸ் மாம்ப்ரே

புதன்கிழமை, 16 அக்டோபர் 2024      விளையாட்டு
Paras-Mambre 2024-10-16

Source: provided

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுக்க திட்டங்களை வகுத்து வருகின்றன. மேலும், பயிற்சியாளர் குழுவையும் அதிரடியாக மாற்றி வருகின்றன. அந்தவகையில், மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்க் பவுச்சர் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 முதல் 2022 -ம் ஆண்டு வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மகிலா ஜெயவர்தனே. அந்த காலக் கட்டத்தில் மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில், மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே இணைந்துள்ளார். அவர் லசித் மலிங்காவுடன் இணைந்து பந்துவீச்சு துறையில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

_________________________________________________________________________________

மிதாலி ராஜ் விமர்சனம்

பெண்கள் டி20 உலகக்கோப்பை யு.ஏ.யி-ல் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீராங்கனை சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியில் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அணியில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. சிறந்த அணியை வீழ்த்துவது முக்கியம். 

ஆனால், மற்ற அணிகளை வீழ்த்தி நாம் நிறைவு பெற்றது போல உணர்கிறோம். மற்ற அணிகள் வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அணியின் லோயர் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் இல்லை. அந்த இடத்தில் பலரை நாம் முயற்சித்து பார்த்திருக்க வேண்டும். அதையும் செய்ய தவறி உள்ளோம். ஆடவர் அணியில் அதை செய்து பலன் அடைந்துள்ளனர். தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால் இளம் வீராங்கனைகள் உள்ளனர். ஸ்மிருதி, ஜெமிமா போன்றவர்கள் அணியில் உள்ளனர். ஸ்மிருதி, நீண்ட காலமாக துணை கேப்டனாக உள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து