முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு வெளியாகும் ப்ளடி பெக்கர்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      சினிமா
Bloody-Becker 2024-10-21

Source: provided

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. படம் குறித்து பேசிய நெல்சன் திலீப்குமார், த்ரில்லர் மற்றும் டார்க் காமெடி எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே கலந்து இப்படம் உருவாகி இருகிறது என்றார். பின்னர் பேசிய கவின், என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இப்படம் இருக்கும்.

ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம். நமக்கு பிடித்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. ’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம் என்றார்.

படத்தின் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் பேசுகையில், நான்  எழுதியிருந்த கதாபாத்திரத்திற்கு கவின் உயிர் கொடுத்துள்ளார். ரெடின் கிங்சிலி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது என்றார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து