முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர்களின் தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்: வீரவணக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னையில் டிஜிபி வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து