முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மேலும் டெல்டா மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரத்து 929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது நேற்று முன்தினம் காலை 18 ஆயிரத்து 94 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து