முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் : கர்நாடக கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Cort 2023 04 17

பெங்களூரு, தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 101 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் கொப்பள்  மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.   

முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில்  தலித்  மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

இந்த வன்முறையை தொடர்ந்து கர்நாடகா முழுவதும்  பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாக   117-பேரை கைது செய்தனர்.  இவர்களுக்கு எதிரான வழக்கு கொப்பல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வழக்கில்  தொடர்புடைய 101 பேரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. 

இதையடுத்து,  தண்டனை விவரங்களை  அறிவித்த கோர்ட்டு,  குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை  விதித்து உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை கேட்டதும்  குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அங்கேயே   போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.  தற்போது கங்காவதி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து