முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரா சட்டசபை தேர்தல்: ரூ.138 கோடி மதிப்பில் நகைகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      இந்தியா
Sothanai 2024-03-17

Source: provided

மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணமாகவோ பொருளாகவோ அரசியல் கட்சியினர் அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில், சஹாகர் நகரில் பத்மாவதி வளாகத்துக்கு அருகே மினிலாரி நடத்தப்பட்ட சோதனையில் பெட்டிகளில் வெள்ளைநிறப் பைகளில், சுமார் ரூ. 138 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மினிலாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மும்பையில் இருந்து புணே செல்லவிருப்பதாகவும், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.

இருப்பினும், இதனைச் சரிபார்ப்பதற்காக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த அக். 21 ஆம் தேதியில் மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு செல்லும் புணே சதாரா நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் சென்றவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து